யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவர் கள அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது என்று கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜக்கிய நாடுகள் அலுவலகத்துக்குச் சென்றனர்.
இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்.
போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் அலுவலகத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.
Discussion about this post