இலங்கையில் பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்தார்.
பெரும்பாலான பெண்கள் அழகுக்கலை நிலையங்கள் ஊடாக போதைப் பாவனைக்கு அடிமையாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெண்களிடம் ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், குருநாகல் மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையான பெண்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
அடிக்கடி அழகுக்கலை நிலையங்களுக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் தொடர்பாகப் பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post