ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேளையில் அவர்களில் ஒருவர் கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக பாதுகாப்பை கோரியுள்ள போதிலும், அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என ஆராயப்பட்டது.இதன் போது அவரது திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் உள்ளமையே பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சனையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
விசேட பாதுகாப்புபிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பையும், திலித் ஜயவீரவுக்கு அதிக பாதுகாப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என பரிசீலிக்கும் போது, பெண்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர் மட்டுமே, சிறப்பு பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது.
தேர்தல் சட்டம்எவ்வாறாயினும், தேர்தல் சட்டங்களுக்கமைய, இவர்கள் ஒவ்வொருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானதல்ல என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன
இந்த 39 வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post