ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தேசிய கொடிகளை தாங்கியவாறு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பற்றினர்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர். எனினும், போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்று இலக்கை அடைந்தனர்.
இதன்போது சுமார் 41 பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது.
Discussion about this post