30 அமைச்சுப் பதவிகளை தவிர வேறு எவருக்கும் அமைச்சுப் பதவிகளை கொடுக்கபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
மொனராகல – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றி
மாணவர்களுக்கு வ்ழங்கும் நிகழ்வில் பங்குபெற்றிய போதே ஜனாதிபதி இதனை
கூறினார்.
வருகின்ற மூன்று வருடங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அரச
ஊழியர்கள் அனைவரிடமும் கேட்டுகொண்டார்.
பொதுமக்களுக்கான அரச சேவையை உருவாக்கும் பொருட்டு, தாம்
எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் விஜயம்செய்யவுள்ளதுடன் ,
கிராமங்களிடம் கலந்துரையாடல் திட்டத்தை மீள தொடங்கி பொதுமக்களின்
எதிர்பார்ப்பை துரிதமாக நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Discussion about this post