ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணி நேற்று (11) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிராேத செயல்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,”ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவரும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ஜனாதிபதியின் ஆலாேசர் ஒருவர் வேட்பாளராக வருவதாக இருந்தால் அது ஜனாதிபதியை ஊக்குவிப்பதற்கே போட்டியிடுகிறார் என்பது எவருக்கும் புரிந்துகொள்ளலாம். இந்த செயல் சட்டவிராேதமானதாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி இந்தளவு கீழ் மட்டத்துக்கு செல்வதாக இருந்தால் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 27பேர் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றனர். இது ஜனநாயக உரிமையை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.
இதேவேளை, நானே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வமான தலைவர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பாகவே நான் போட்டியிடுகிறேன். இடைக்கால தடை உத்தரவு இருப்பதால் அதனை பயன்படுத்துவதில்லை.
நான் பலாத்காரமாக வரவில்லை
கூட்டணி அமைத்து பாேட்டியிடும்போது கட்சியை யாரும் ஊக்குவிப்பதில்லை. போட்டியிடும் கட்சியையும் சின்னத்தையுமே ஊக்குவிக்கின்றனர்.
சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச அனைவரும் அவ்வாறே செயற்பட்டனர். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் என்னுடனே இருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்துக்கு நான் பலாத்காரமாக வரவில்லை. இரண்டு முறை கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டேன்.
தலைமை பதவிக்கு நிமல் சிறிபால, தயாசிறி யாரும் போட்டியிடவில்லை. கட்சியின் நிறைவேற்று சபையின் 240பேரில் 220பேர் என்னுடன் இருக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.
Discussion about this post