நாடாளுமன்றத்துக்கு அருகே பொல்துவ சந்தியில் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டனர். அதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது.
அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொலிஸார் தாக்கச் செய்த மனுவை, வெலிகடை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்தது.
இன்று பிற்பகல் கொழும்பு, தாமரைத் தடாகத்துக்கு அருகில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, மருதானை ஊடாக காலிமுகத்திடலை நோக்கி நகர்ந்தது. ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கொழும்பு உலக வர்த்தக மையத்துக்குக்குப் பிரவேசிக்கும் இலங்கை வங்கி வீதியில் பொலிஸ் தடைகளை அகற்றி நுழைய முயன்றதை அடுத்து பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாககுதல், தண்ணீர் தரைப் பிரயோகம் மேற்கொண்டனர். அதனால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
மாணவர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
Discussion about this post