எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அந்த கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒழுக்காற்று நடவடிக்கை இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,(sagara kariyawasam)
இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post