ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (30) வரை 1,482 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 07 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1419 முறைப்பாடுகளும், 56 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
குறித்த முறைப்பாடுகளில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post