இலங்கையின் 09வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது.நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.வாக்குப் பதிவுகொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்க்கான முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு பதிவு செய்தார்.
வாக்களித்தப் பின்னர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டினது எதிர்காலத்தினையும், மக்களினதும் எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு தமது ஜனநாயக கடைமையினை (வாக்களிப்பு) நிறைவேற்றுவதற்காக நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளோர்
இதேவேளை மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த நிலையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும், கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும், ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
Discussion about this post