தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் பெறவில்லை என ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ சொல்வது சிரிப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
கூறியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை முகப்புத்தகத்தில் கூறியுள்ளார்.
பங்களாதேஷிடம் கடன் பெற்றுவிட்டு, இப்போது மீண்டும்
செலுத்தும் தவணையை கெஞ்சி நீடித்து விட்டு, கடனே வாங்கவில்லை என்கிறார்.
ஏற்கனமே இருக்கும் பெருங்கடனைத்தான் இன்று முழு நாடும் வட்டி, குட்டி என இப்போ கட்டி
தொலைத்து கொண்டிருக்கிறோம். இதில், நான் கடன் வாங்கவே இல்லை என வாக்கு
மூலம் வேறு…!’ என அவர் மேலும் கூறியுள்ளார்.
Discussion about this post