புதிய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பற்துறை ,விமான சேவை அமைச்சராகவும், சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும்,
ஹரீன் பெர்ணான்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும், நளின் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகவும்,
விஜயதாச ராஜபக்ச நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,அரசமைப்பு விவகார அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன பெருந்தோட்டத்துறை அமைச்சராகவும், டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
Discussion about this post