புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் கைதாகப் போகின்றவர்களில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அடாவடிகளில் ஈடுபட்டமையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஜனாதிபதி கிடைத்தமை அதிஸ்டம்இதனிடையே ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை அதிஸ்டமானதென வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். அவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் பதவியை பெற்றுக் கொள்கிறேன்.
அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன்” எனவும் புதிய வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.அதேவேளை முன்னதாக யாழ்.மாவட்ட செயலராக இருந்த வேதநாயகன் அரசியல் பழிவாங்கல் காரணமாக ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post