திருகோணமலையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
குறிப்பாக தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதனையும், வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத்தேர்தலினை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உருப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post