ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எந்தவொரு விசாரணைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Discussion about this post