ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க.
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இந்த அரசு பதவி விலகுவதற்கு எதிர்வரும் 11 ஆம் திகதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பதவி விலகாவிட்டால், 11ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் வெடிக்கும்.
மின்சாரம் இல்லாமல் போகும், ஜனாதிபதி மாளிகையில்கூட மின்சாரம் துண்டிக்கப்படும், நீர் இருக்காது, தொலைபேசி சேவை இயங்காது, சிறையில் இருப்பதுபோல்தான் வாழ வேண்டிவரும்.
எனவே, கௌரவமாக பதவி விலகி வீடு செல்ல வேண்டும். 225 பேரையும் வீடு செல்ல வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தவில்லை. ஆனால் ஒரு சிலர் அதற்கான கருத்தாடலை உருவாக்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post