மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாகவுள்ள மின்மாற்றியில் ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் வீரியம் பெற்றுள்ளன. இன்றும் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தநிலையில், ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post