ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி நேற்று (19.07.2024) வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியீடுநீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் நேற்று வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அரசமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை தற்போது ஏன் கொண்டுவரவேண்டும் அதற்கான தேவை என்னவென்று சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த சட்டமூலத்தை தற்போது கொண்டுவருவதற்கான அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர் எனது பார்வையில் இது ,வாக்காளர்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
Discussion about this post