ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் இன்று இரவு திடீரென பெரும் திரளான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் வீதியை மறித்துப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை தோன்றியதுடன், பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் நகரவிடாது தடுக்கப்பட்டனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்துக்கு எதிராகவுமே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

Discussion about this post