ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக உறுதியான ஆட்சியை நடத்துவதற்கும் ரணில் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாள்களாக பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று உடனடியாக வருமாயின் ரணிலை வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றிபெறச் செய்ய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Discussion about this post