ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அண்மையில் சீருடையுடன் பங்கேற்ற இந்தப் பொலிஸ் அதிகாரி, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
அதையடுத்துக் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்று அவருக்குப் பிணை வழங்கியது. ஆயினும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் அந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post