சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் (Nandalal Weerasinghe) இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் (Mahinda Siriwardana) கலந்து கொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொருளாதார நிலைமை
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post