இலங்கை வந்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை இந்தச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக எரிக் சொல்ஹெய்முடன் மஹிந்த ராஜபக்ச ஆராய்ந்தார் என்றும், நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு விடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களின்போது எரிக் சொல்ஹெய்ம் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த மஹிந்த ராஜபக்ச , உள்நாட்டு மோதல் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post