செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கையாக ஏற்பட்ட குழி காரணமாக கரடியின் முகம் போல் தோன்றுகிறது என்றும், இந்த உருவம்மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post