செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பதே கடினம் என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு செல்போன்கள மனித வாழ்க்கையுடன் ஒன்றினைந்துவிட்டது.
செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்ட போதிலும், அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் பலர் இன்னும் உள்ளனர்.
பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டும் எடுத்து பேசுவது பெண்களுக்கு நல்லது. ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.
எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.
போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தூர எறிவது நல்லது.
சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் மொபைலை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். மொபைலை அப்டேட் செய்வதன் மூலம், உங்கள் தொலைபேசியில் ஏதேனும் பிழை இருந்தால், அதை புதுப்பித்தல் மூலம் சரிசெய்யலாம்
ஏதேனும் இணையதளத்தில் இருந்து செயலியைப் பதிவிறக்குவது உங்கள் பழக்கமாக இருந்தால், இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மூல வைரஸ், மால்வேர் செல்போனை தாக்கும்.
Discussion about this post