இலங்கை ஜனதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் ஏனையோர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை விரும்பவும், பகிரவும் முடியும். அவற்றில் கருத்திடுவதற்கான தெரிவு நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இலங்கையில் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாளாந்தம் நீண்ட நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவற்றால் கொதிப்படைந்துள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கும், ராஜபக்ச சகோதரர்களுக்கும் எதிராகக் கடும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பேஸ்புக் பக்கத்தில் கருத்திடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.
Discussion about this post