தங்களது ஆட்சிக்காலத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்று முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தவறான தீர்மானங்கள், காலத்துக்கு காலம் சரியான தீர்மானங்களை எடுக்காமை மற்றும் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எங்கள் கட்டமைப்பை விரைவாக உருவாக்கினோம். நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்தச் சென்றோம். அங்குதான் எமது அரசாங்கம் தவறிழைத்துள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இப்போது எதுவும் செய்ய முடியாது.-என்றார்.
Discussion about this post