கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் எரிபொருள் குறைவதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஏற்கனவே சென்னை திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post