மெசச்சுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts Institute of Technology ) இல் மாணவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தப்பட்ட ‘மைண்ட் ரீடிங்’ சாதனத்தை (ஹெட்செட்) தயாரித்துள்ளார்.
அதன்படி, வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற நபர்களுடன் பேசுவதை பயனர்களுக்கு அனுமதிக்கிறது.
தகவல்களை அனுப்புவதும், பெற்றுக்கொள்வதும் முற்றிலும் தனிப்பட்டதாக அமைந்திருக்கும்.
இந்த சாதனத்தை அணிவதன் மூலம், உரையாடல் இல்லாமல் பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற பணிகளைச் செய்ய முடியும்.
இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறிப்பாக அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல்தொடர்புகளை வழங்குவதாகும்.
தற்போது எம்ஐடியில் பிஎச்டி படித்து வரும் இந்தியாவின் புது டெல்லியில் பிறந்த அர்னவ் கபூரால் உருவாக்கப்பட்ட இந்த சாதனத்தின் முன்மாதிரி 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post