இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் நேற்று பிற்பகல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அவரது பூதவுடல் இன்று சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
புற்றுநோய் காரணமாக அவருக்கு கடந்த 5 மாதங்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில்இ கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றுப் பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந் நிலையில்இ இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன் அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலை கொழும்பு நோக்கி வருகைத் தந்திருந்தனர்.
இந்த நிலையில் பாடகி பவதாரணியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில் அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றது.
1976 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி சென்னையில் பிறந்த இவர் 1995 ஆம் ஆண்டு வெளியான ராசையா திரைப்படத்தின் ஊடாக இளையராஜாவினால் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
மேலும் இசையமைப்பாளராகவும் சினிமாத்துறையில் கால் பதித்த பவதாரணி அமிர்தம் இலக்கணம் மாயநதி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்தநிலையிலேயே 47 ஆவது வயதில் இவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
Discussion about this post