சந்தைக்கு வெளியே சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் மரக்கறி வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோரிடம் கையளித்தனர்.
சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதால் , சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியைக் கொள்வனவு செய்வதில்லை என்று சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்கின்றனர்.
வீதியோர கடைகளில் மரக்கறி கொள்வனவுக்காக வருவோர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன.
எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் நடக்கும் மரக்கறி வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post