செங்கடலில் மீண்டும் மற்றுமொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்திகள் அறிவித்துள்ளனர்.
ஹவுத்தி(houthi) இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ(Yahya Saree )கூறுகையில், “செங்கடலில் சென்றுகொண்டிருந்த க்ரோட்டன் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
கப்பல் மீது தாக்குதல்
அவர் ஒரு தொலைக்காட்சி உரையில் “கடற்படை, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைப் படைகளால்” தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறினார்
லைபீரியா நாட்டு கொடியின் கீழ் பயணம் செய்த கப்பலே தாக்குதலுக்கு இலக்கானது.தாக்குதல் எப்பொழுது நடத்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
செங்கடலுக்கு கிழக்கே 130 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பலுக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை இரண்டு ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் குழு தெரிவித்துள்ளது.கப்பலில் சென்றோர் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கிரேக்க நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல்களை குறிவைத்துள்ளனர்.
Discussion about this post