புதிய இணைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் குறித்த கலந்துரையாடலுக்காக நாளைய தினம் (28) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, கடந்த தேர்தலின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள், முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post