சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் மோதல் ஆரம்பித்தது.
இதனால், இலட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிற்குள்ளேயும் மற்றும் அயல் நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இதுவரை 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக என ஐக்கிய நாடுகள் புள்ளி விபரம் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய பகுதியை உரிமை கொண்டாடுவதில் மோதல் ஏற்பட்டது.
இம்மோதலில் அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் இனம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளராக செயற்பட்டு வந்த கானா நாட்டை சேர்ந்த வீரர் உட்பட 32 பேர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்து நிலைமை சீராகியதால் அங்கு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post