சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சந்தை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் விமானம் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 55 பேர் காயமடைந்துள்ளதாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சூடான் இராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் பத்தா புர்ஹானுக்கும், துணை இராணுவப் படைத் தலைவர் ஜெனரல் மொஹமட் ஹம்தான் டகாவுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.
இதனால், துணை இராணுவப்படையினருக்கு, அரச இராணுவத்திற்கும் இடையில் கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.
கிரேட்டர் கார்டூம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவாறு துணை இராணுவப் படையினர் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர்.
அவர்களை குறிவைத்து சூடான் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் மோதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த மோதல்கள் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post