சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோர் அவற்றில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும்.
சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோர் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும்.
சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் மொழி, பிரெஞ்சு மொழி, இத்தாலிய மொழி மற்றும் ரொமாஸ்ட் மொழிகளே தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, உள்ளூர் மட்டத்தில் பேசும் மொழியையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். உள்ளூர் மொழி மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு அத்தியாவசியம் என்பதாலேயே, குடியுரிமை வழங்கும் விடயத்தில் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post