சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்ரெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21 வீதத்தால் குறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 47 ஆயிரத்து 293 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர் எனவும், செப்ரெம்பர் மாதத்தில் 29 ஆயிரத்து 802 பயணிகளே வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் கடந்த செப்ரெம்பர் மாதத்திலேயே மிகவும் குறைந்தளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
Discussion about this post