சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6இனை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் முக்கியமானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன ஆராய்ச்சி கப்பலான ஷி யான் 6 கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்க இந்தியா உடன்படுமானால், அது பிரச்சினையாக அமையாது.
எனினும், அதற்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கும் போது, பிரச்சினைகள் ஏற்படும். இலங்கை தமது வலயத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்பதையே விரும்புகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post