சர்ச்சைக்குரிய சீன யுவான் வாங்-5 ஆய்வுக் கப்பல் இன்று காலை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
காலை 8 மணியளவில், குறித்த கப்பல் துறைமுக வளாகத்தை அடைந்தது. இழுவைகள் பயன்படுத்தப்பட்டு ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் யுவான் வாங்-5 ஆய்வுக் கப்பலை வரவேற்கும் சிறப்பு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினரும் இதில் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, அதுரலியே ரத்தின தேரர் ஆகியோரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அப்போது நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உலகளாவிய கொவிட் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இவ்வாறானதொரு தருணத்தில், கப்பலில் இருந்து இறங்கும் சீனக் கேப்டனிடம் முகமூடி அணியாமல் கைகுலுக்க முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தயாரானார்.
கைகுலுக்கலை ஏற்றுக்கொள்ளாத கேப்டன் சரத் வீரசேகர உள்ளிட்டோருக்கு கையை உயர்த்தி காட்டினார்.
இதற்கு மேலதிகமாக இலங்கையிலுள்ள சீன உயர்ஸ்தானிகரும் கேப்டனுடன் கைகுலுக்க முற்பட்ட போதும் அவரது வாழ்த்துக்களை கப்பல் கேப்டன் ஏற்கவில்லை.
எவ்வாறாயினும், நிகழ்வில் பங்குபற்றியவர்களில், ஏறக்குறைய அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசம் அணியாதமையும் விவாதத்திற்கு உள்ளானது.
Discussion about this post