சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், அதிபர் ஜி ஜின்பிங் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் தான் பயணிக்கிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.
“இது மிக அழகான கார்” என ஜோ பைடன் பாராட்டினார். அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், “ஆம், இதன் பெயர் ஹாங் கி” என பதிலளித்தார்.
மீண்டும் ஜோ பைடன், “இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது.
சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று” என கருத்து தெரிவித்துள்ளார்.
Discussion about this post