மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளால் மீண்டும் பீதி அடைந்துள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் 1 முதல் 20 ஆம் திகதி வரை 24 கோடியே 80 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் வெளியாகி உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனிடையே கொரோனா பெருந்தொற்றால் தினமும் 9 ஆயிரம் பேர் உயிரிழந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Discussion about this post