சீனா இலங்கையில் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான ;
முதலீடுகளை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது.
இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு
கொண்டிருக்கின்றன.விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் செயல்வடிவம் பெறும்
என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டு
திட்டம், அம்பாந்தோட்டையில் சைனோபார்ம் தடுப்பூசி உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை, பாதுகாப்பு கண்ணாடித் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுவதற்கு
பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மேலும் இலங்கையின் பாடசாலைகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற டிஜிட்டல்
வகுப்பறை திட்டத்தை முன்னெடுப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது.
அதேபோன்று நவீன தொழில்நுட்ப விவசாய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும்
நாரஹேன்பிட்டியில் ஒரு தொடர் மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் சீனா
முதலீடு செய்யவுள்ளது என்றும் பாலித கோஹண சுட்டிக்காட்டினார்.
Discussion about this post