உக்ரைன் மீதான தாக்குதலுக்காக சீனாவின் இராணுவ உதவியை ரஷ்யா நாடியுள்ளது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
உலக அளவிலான பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள அந்நாட்டிற்கு சீன அரசு உதவக் கூடாது.
நேரடியாகவும் தனிப்பட்டமுறையிலும் சீனாவிற்கு இதைக் கூறிக்கொள்கிறோம். இந்த பாதிப்பிலிருந்து ரஷ்யா மீண்டு வர, சீனாவோ அல்லது வேறெந்த நாடுகளோ உதவினால் நாங்கள் அதை முன்னெடுக்க விடமாட்டோம் என்றார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றசாட்டுகளை சீன அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் பங்கு குறித்து அமெரிக்கா தீங்கிழைக்கும் நோக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறது என்றார்.
Discussion about this post