ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன, அதிபரின் பதில் செயலாளராக இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபரின் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post