எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 70 லட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பைசர் தடுப்பூசியின் எஞ்சிய தடுப்பூசிகள் உரிய முறைகளைப் பயன்படுத்தி அகற்றப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு, புதிய தொகுதி இறக்குமதி செய்யப்படும் வரை, பைசர் தடுப்பூசி இனி நாட்டில் கிடைக்காது என்று, சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
தடுப்பூசிகள் காலாவதியாகும் முன், பைசரின் இரண்டாவது பூஸ்டர் அளவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post