நாட்டுக்கு இழைத்த குற்றத்துக்காக முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
குடும்ப அரசியலை முன்னின்று வழிநடத்தியவர், இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவ்வாறான விடயங்களை செய்த ஒருவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியுமா ? தமக்கு எந்த பொறுப்பும் இல்லை என ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்திவிட்டு சிரித்துக்கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார், இன்று நாட்டில் அவரை பற்றி எந்த விவாதமும் இல்லை என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post