நாட்டில் தற்போது சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் கை, கால், வாய் தொடர்பான வைரஸ் நோய் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று மேல் மாகாண முன்பள்ளிப் பிரிவின் பணிப்பாளர் மஹிந்த கொடித்துவக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளியில் சிறுவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.
Discussion about this post