டெங்கு மற்றும் கொரோனாத் தொற்றுக் காரணமாக அதிகளவான சிறுவர்கள் மருத்துவமனையியல் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையான சிறுவர் சிறுமியர் டெங்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 12 சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெறுகின்றனர் என்று மருத்துவர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிடம் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி ஆகிய பொதுவான நோய் அறிகுறிகளை அவதானிக்க முடிகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post