கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது என்று குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடருமானால் அவர்களின் வயதுக்கு ஏற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயதுக்கு ஏற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தையாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும்.
இந்த நிலையை உடனடியாகத் தடுக்க, குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் வருங்கால சந்ததியினர் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post