சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியிலுள்ள வீடொன்றில் மின்மானியைப் பரீட்சிப்பதற்கு மின்சார சபை ஊழியர் ஒருவர் சென்றுள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த வீட்டில் இருந்த 9 வயதுச் சிறுவனை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக குடும்பத்தினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகநபரைத் தேடி வந்தனர். இந்த விடயத்தை அறிந்த மின்சார ச ப ஊழியர், பெரியநீலாவணையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருமணமானவர் என்றும், இரு பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரிய நீலாவணைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post